ஸ்பெயின் தீவிலிருந்து ஸ்காட்லாந்து பயணித்த ரயன் ஏர் நிறுவன விமானத்திற்குள் பயணிகள் அனைவரும் சுமார் 12 மணிநேரம் சிக்கி தவித்துள்ளனர்.
ஸ்பெயின் தீவான Lanzarote விமானநிலையத்தில் இருந்து Edinburgh பயணித்த விமானத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. விமானம், காலை 11:20 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், ஓடுபாதை அருகே சென்று நிலையில் மோசமான காலநிலை காரணமாக விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர், 9 மணிநேரத்திற்கு பிறகு புறப்பட்ட நிலையில், விமான குழுவினர் வேலை நேரத்தை கடந்து பணியாற்றியதால் பிரான்ஸ், Bordeaux-ல் தரையிறக்கப்பட்டுள்ளது.
பின்னர், அங்கிருந்து புறப்பட்டு Edinburgh பயணித்து சென்றுள்ளது. 9 மணிநேரம் காத்திருப்பின் போது, கடும் வெப்பத்தில் விமானத்திற்குள் சிக்கிய பயணிகள், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால், விமானக்குழுவினர் தர மறுத்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து விமானத்திற்குள் தண்ணீர் பட்டில் 3 பவுண்டுக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் கோபமடைந்துள்ளனர். விமானம் காலதாமதமானதால் நிறுவனம் தான் பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்க வேண்டும் என நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து ரயன் ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், Lanzarote-ல் நிலவிய மோசமான வானிலையே விமானம் புறப்பட காலதாமதமானதற்கு காரணம். இதற்காக நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கோருகிறது. இதுசற்றும் எதிர்பாராத ஒன்று என விளக்கமளித்துள்ளனர்.