பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Report Print Abisha in ஏனைய நாடுகள்
37Shares

பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் Davao Occidental மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவானதாக, பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நிலநடுக்கவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இன்று காலை (29.09.2019) 10 மணியளவில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Davao மாகாணம் மட்டுமின்றி பிலிப்பையின்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தோ, காயம், உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்