ரகசிய வீடியோக்களை நண்பர்களிடம் பகிர்ந்ததற்காக மர்ம உறுப்பை அறுத்தெறிந்த காதலிக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அர்ஜெண்டினாவை சேர்ந்த பிரெண்டா பாரட்டினி (28) என்கிற இளம்பெண், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், அவருடைய காதலன் செர்ஜியோ பெர்னாண்டஸ் (42) உடன் ஒன்றாக அறையில் இருந்துள்ளார்.
அப்போது செர்ஜியோவின் கண்களை துணியால் கட்டிய பிரெண்டா, திடீரென கத்தியை எடுத்து அவருடைய மர்ம உறுப்பை வேகமாக அறுத்துள்ளார்.
வலி தாங்க முடியாமல் செர்ஜியோ கதறும் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் இருந்த அவரை மீட்டதோடு பொலிஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பிரெண்டாவை கைது செய்து விசாரித்த போது, செர்ஜியோ தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாலே அப்படி செய்தேன் என பொய் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஆனால் அதன்பிறகு காவலில் எடுத்து விசாரித்த போது தான் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இருவரும் நெருக்கமாக இருந்த பல அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை செர்ஜியோ அவருடைய நண்பர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த பிரெண்டா, அவரை பழிவாங்குவதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஆனால் இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார் என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.