ரஷ்யாவில் மொபைல் போனை உடைத்ததாக கூறி இளைஞர் ஒருவரை இளம் பெண்கள் இருவர் கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Tatarstan மாவட்டத்தில் நடந்த இச்சம்பவத்தில் பெயர் குறிப்பிடப்படாத 22 மற்றும் 32 வயதுடைய பெண்கள் இருவரும் குறித்த இளைஞரை பாலியல் பொம்மையை பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
மட்டுமின்றி இச்சம்பவத்தை அவர்கள் இருவரும் வீடியோவாக பதிவும் செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு பெண்களில் ஒருவர், குறித்த இளைஞரை தங்கள் மொபைலை பழுது பார்க்க குடியிருப்புக்கே அழைத்துள்ளனர்.
ஆனால் அப்போது பழுது பார்க்க தேவையான கருவிகள் ஏதும் இல்லை என்பதால் தமது வீட்டுக்கே எடுத்துச் சென்றுள்ளார்.
இதனிடையே, மொபைலை திருப்பித்தர வந்த போது, அந்த மொபைலில் விரிசல் விழுந்திருந்ததாக கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டுமின்றி சுமார் 38 பவுண்டுகள் தர வேண்டும் எனவும் அடம்பிடித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை அந்த இளைஞர் மறுத்துள்ளார்.
பணம் தரவும் மறுத்த அவரை அந்த பெண்கள் இருவரும் தாறுமாறாக தாக்கியதுடன், அந்த இளைஞரை கட்டிவைத்து பாலியல் பொம்மைகளை பயன்படுத்து துஸ்பிரயோகம் செய்துள்ளனர்.
மேலும், அந்த சம்பவத்தை காணொளி காட்சிகளாக பதிவு செய்த அவர்கள், பணம் தர மறுத்தால் இணையத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து, தாம் குடியிருப்புக்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி சென்ற இளைஞர் நேரிடையாக காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார்.
தகவல் அறிந்த பொலிசார், சம்பவயிடத்திற்கு சென்று, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அந்த இரு பெண்களையும் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு பெண்களுக்கும் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.