இணையத்தில் ஒரு மில்லியன்பேர் பின்தொடரும் அழகி, ஆனால் உண்மையில்? போட்டு உடைத்த வீட்டு உரிமையாளர்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
488Shares

இணையத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடரும் ஒரு அழகி, வீட்டை எந்த லட்சணத்தில் வைத்திருக்கிறார் என்ற உண்மையை அவரது வீட்டு உரிமையாளர் போட்டு உடைக்க, பாதிபேர் அவரை பின்தொடருவதை விட்டுவிட்டார்கள்.

சீனாவைச் சேர்ந்த Lisa Li என்னும் அழகிய இளம்பெண், பல நாடுகளுக்கும் பிரபல உணவகங்களுக்கும் செல்வதன்மூலம் தனது ஆடம்பர வாழ்வை இணையத்தில் பதிவேற்றம்

செய்வதன்மூலம் புகழ்பெற்றவர். அவரை 1.1 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒரு அழுக்கான அடுக்குமாடிக்குடியிருப்பில் குப்பையும், நாய்களின் கழிவும் சூழ வாடகைக்கு வாழ்ந்துவருகிறார்.

ஒழுங்காக வாடகையும் கொடுக்காமல் தனது வீட்டையும் அவர் மோசமாக வைத்திருப்பதைக் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர், எவ்வளவோ சொல்லியும் Lisa Li கேட்காமல் இருக்க, அவரது வீட்டை வைத்திருக்கும் நிலையை வீடியோவாக எடுத்த அதை இணையத்தில் பதிவேற்றிவிட்டார்.

அந்த வீடியோ வைரலாக, அவரை பின்தொடர்ந்தவர்கள் பலர் இனி அவரது வீடியோக்களை பார்ப்பதில்லை என முடிவு செய்துள்ளார்கள்.

உடனடியாக வீட்டு உரிமையாளரை சென்று சந்தித்த Lisa Li, அவரிடம் மன்னிப்புக்கோரியதோடு உடனடியாக வீட்டை சுத்தம் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ஆனாலும், 60,000கும் அதிகமானவர்கள் அவரை போலி என விமர்சித்துள்ளதோடு, அவரை பின்தொடர்வதையும் விட்டுவிட்டார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்