மெக்சிகோவில் நிர்வாண நிலையில் கிடைத்த அழகிய இளம்பெண்ணின் உடல்: கடத்தல் கும்பலின் வேலையா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
165Shares

அழகிய இளம்பெண் ஒருவரில் உடல், ஆடைகள் எதுவும் இன்றி, அடையாளம் காண இயலாத அளவுக்கு அழுகிய நிலையில் மெக்சிகோவில் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், அந்த உடல் Daniela Patino என்ற கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளது.

யூடியூப் பிரபலமான Daniela, ஸ்பெயினிலுள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்வதற்காக புறப்பட்டிருக்கிறார்.

ஆனால் அவரால் குவாதிமாலா வரை மட்டுமே செல்ல முடிந்திருக்கிறது. அதற்குள் அவர் ஒரு கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கிறார்.

Image: CEN

தனது தந்தைக்கு மொபைலில் செய்தி ஒன்றை அனுப்பிய Daniela, தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்துள்ளதாகவும், 3 மில்லியன் மெக்சிகோ பெசோக்கள் கொடுத்தால்தான் தன்னை விடுவார்கள் என்றும் இல்லையென்றால் தன்னை கொன்றுவிடுவார்கள் என்றும், அப்படி தான் கொல்லப்பட்டால் எந்த இடத்தில் தன்னை தேடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அவரது தந்தையோ, தன்னால் உடனடியாக அவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது என்று கூறி, உள்ளூர் பொலிசாரிடம் புகாரளிக்குமாறு பதில் செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு பிறகு Danielaவிடமிருந்து தகவல் எதுவும் இல்லை.

பின்னர் பிரித்தானியர்கள் விரும்பி செல்லும் சுற்றுலாத்தலமான Quintana Roo என்ற இடத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் ஒரு இளம்பெண்ணின் உடல் கிடைத்துள்ளது.

Image: CEN

மெக்சிகோ பத்திரிகைகளில் அந்த பெண்ணின் படத்தை வெளியிட்டு, இப்படி ஒரு பெண்ணின் உடல் கிடைத்துள்ளது, இவரை தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்திருக்கிறது.

அந்த படத்தை பார்த்த Danielaவின் தோழி ஒருவர் அவரை அடையாளம் கண்டிருக்கிறார்.

அடையாளம் காண முடியாத அளவு அவரது உடல் அழுகியிருந்தாலும், அவரது உடலில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்தே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மெக்சிகன் பொலிசாரும் கொலம்பிய பொலிசாரும் Danielaவின் உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Image: CEN
Image: CEN

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்