கருக்கலைப்பு செய்யப்பட்ட குழந்தை கண் விழித்து அழுத தருணம்: அதிர்ச்சியில் உறைந்த தாய்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

கருக்கலைப்பு செய்யப்பட்ட தங்கள் குழந்தையை கடைசியாக பார்க்க விரும்பிய பெற்றோர், அதை பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அது கண்விழித்து அழ ஆரம்பித்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருந்த, சீனாவைச் சேர்ந்த Hu என்ற பெண்ணின் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு மரபணுக்குறைபாடு இருப்பது தெரியவந்ததையடுத்து, அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தனர் அந்த பெற்றோர்.

வெற்றிகரமாக தாய்க்கு எந்த பிரச்சினையுமின்றி கருக்கலைப்பு செய்ததாக பின்னர் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் குழந்தையின் உடலை கடைசியாக ஒரு முறை பார்க்க அனுமதி கோரியுள்ளனர் Huவும் அவரது கணவர் Gaoவும்.

கருக்கலைப்பு செய்யப்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு குழந்தையின் உடலைக் காணச்சென்றுள்ளனர் கணவனும் மனைவியும்.

குழந்தையின் உடலை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே, திடீரென அந்த குழந்தை கண் விழித்து அழ ஆரம்பித்துள்ளது.

அதிர்ந்துபோன பெற்றோர், குழந்தையை வளர்ப்பதற்காக வீட்டுக்கு எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்தனர்.

மருத்துவர்கள் சரியான முறையில் கருக்கலைப்பு செய்யாததால், மூளைக்குறைபாடுடைய அந்த குழந்தையை தாங்கள் வளர்க்க வேண்டியுள்ளது என்று கூறி, 138,000 பவுண்டுகள் இழப்பீடு கோரி, மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்தனர் அந்த பெற்றோர்.

மருத்துவமனை ஆவணங்கள் உண்மையானதாக இருப்பதாக கூறிய நீதிமன்றம், இப்படி ஒரு குழந்தை உயிர் பிழைப்பது அபூர்வமே என்று கூறி மருத்துவமனைக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

பின்னர் அந்த தீர்ப்பை எதிர்த்து தம்பதி மேல் முறையீடு செய்ய, முதல் தீர்ப்பு நியாயமானதே என்று கூறிய நீதிமன்றம், என்றாலும் மருத்துவமனை தம்பதிக்கு 5,600 பவுண்டுகள் இழப்பீடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்