பயங்கரவாதிகள் என நினைத்து அப்பாவி பொதுமக்கள் மீது குண்டுவீச்சு... 30 பேர் பரிதாப பலி!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்க ஆதரவு படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதல் அப்பாவி பொதுமக்கள் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் அமெரிக்க வீரர்களுடன் இணைந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் புதன்கிழமையன்று ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அந்த சமயத்தில் சோர்வடைந்த தொழிலாளர்கள், முக்கியமாக தினசரி கூலி சம்பாதிப்பவர்கள், அருகிலுள்ள ஒரு வயலில் பைன் கொட்டைகளை அறுவடை செய்த பின்னர் கூடாரத்திற்கு அருகே ஓய்வெடுத்து கொண்டிருந்துள்ளனர்.

தவறுதலாக நினைத்து நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில், அங்கிருந்த அப்பாவி பொதுமக்கள் 30 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்திருப்பதாக அப்பகுதியின் தலைவரான மாலிக் ரஹத் குல் தெரிவித்துள்ளார்.

இதனை காபூலில் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இறந்தவர்களை பற்றிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்