நாட்டையே உலுக்கிய 5 வயது சிறுமி மரண வழக்கு... நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஜப்பான் நாட்டையே உலுக்கிய 5 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் அலட்சியமாக இருந்த தாய்க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் யூரி புனாடோ என்ற 27 வயது பெண், தமது 2-வது கணவர் மூலம் கடந்த 2016-ஆம் ஆண்டில் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அந்த குழந்தை பிறந்தது முதல் முதல் கணவருக்குப் பிறந்த யுவா என்ற மகளை அவர் சரியாக கவனிக்கவில்லை.

மகனை கவனிப்பதற்காக 5 வயது மகளை வீட்டில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்ததால், அவருக்கு இரண்டு மாதங்களாக வெறும் சூப்பு மட்டுமே உணவாக கொடுக்கப்பட்டதால், 12 கிலோ எடையில் இருந்த மகள் யுவா, 4 கிலோ உடல் எடை குறைந்தார்.

அத்துடன் யுவா தனது வளர்ப்புத் தந்தை யுடாயால் கடுமையாக தாக்கப்பட்டார். இதனால் 5 வயதே ஆன யுவாவுக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது.

அதைக் கண்டுகொள்ளாமல் விட்டதால், குழந்தை ஓரிரு நாட்களில் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் மேற்கொண்ட சோதனையில், அங்கு சிறுமி தன்னுடைய டைரி ஒன்றில், பெற்றோரிடம் தன்னை மன்னிக்குமாறு மிகவும் கெஞ்சியும், இனிமேல் இருவரும் சொல்லாமலேயே அனைத்து வேலைகளையும் செய்வேன் என்றும் உருக்கமாக எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி, நாட்டிலே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதால், குழந்தைகள் வன்கொடுமையைத் தடுக்க சிறப்புத் தீர்மானங்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதன் பின் இது தொடர்பான வழக்கின் போது, தன் வளர்ப்புக் கணவன் தான் அவ்வப்போது பைத்தியம் பிடித்தது போல் தாக்கியதாகவும், அதில் தானும் பாதிக்கப்பட்டவள் என்பதால் தாக்குதலைத் தடுக்க தனக்கு சக்தியில்லாமல் போனதாகவும் 2-வது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், ஒரு தாயாக தன் மகளை கவனிக்கத் தவறியதோடு, மகளை விட கணவனே பெரிது என நினைத்திருந்த யூரியின் அலட்சியத்தால் மகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகவும் கூறி, 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வளர்ப்புத் தந்தை மீதான வழக்கு அக்டோபர் 1-ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்