ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபரை காப்பாற்றிய குட்டி யானை... நெகிழ்ச்சி வீடியோவின் உண்மை பின்னணி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் தண்ணீருக்குள் உயிருக்கு போராடியது போல் நடித்த நபரை யானை ஒன்று காப்பாற்றிய வீடியோ தற்போது 3 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வைரலாகியுள்ளது.

தாய்லாந்தின் காம் லா என்ற இடத்தில் உள்ள யானைகள் உயிரியல் பூங்காவில் கடந்த 2016-ஆம் ஆண்டு யானைகளை வளர்த்து வரும் நபர், அங்கிருக்கும் ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்படுவது போல் நடிக்கிறார்.

அப்போது அங்கிருந்த யானைகளில் குட்டி யானை ஒன்று அவரைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரின் உள்ளே இறங்கி நீந்தி, தன்னுடைய துதிக்கையால் அவரை காப்பாற்றுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது வரை மட்டும் சுமார் 67 லட்சத்திற்கும் மேலானோர் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட் செய்து அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்