பதின்ம வயது பெண்ணை நீச்சல் குளத்திற்குள் அமிழ்த்தி கொன்ற நபர்: ஒருதலைக்காதலால் விபரீதம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பதின்ம வயது பெண் ஒருவர் மீது கொண்ட ஒருதலைக்காதலால், அவரை நீச்சல் குளத்திற்குள் அமிழ்த்தி கொலை செய்துள்ளார் ஒருவர்.

டொமினிக்கன் குடியரசில் உள்ள நீச்சல் குளம் ஒன்றிற்கு தனது தோழியுடன் சென்றுள்ளார் Nairobi Montés (15) என்ற பெண்.

அப்போது நீச்சல் குளத்திலிருந்த மற்றொரு 16 வயது ஆண், Nairobiயிடம் வம்பு செய்துள்ளார்.

Nairobiயை மீண்டும் மீண்டும் நீச்சல் குளத்திற்குள் அவர் தூக்கி வீசுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

வீடியோவை காண

பின்னர் Nairobiயைத் தொடர்ந்து நீச்சல் குளத்திற்குள் குதிக்கும் அந்த நபர், அவளை தண்ணீருக்குள் அமிழ்த்தி பிடித்து வைத்திருக்கிறார்.

தண்ணீருக்குள் வெகு நேரம் அமிழ்த்தி வைக்கப்பட்டிருந்த Nairobi மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறார்.

விசாரணையில், Nairobi மீது அந்த நபருக்கு ஒருதலைக்காதல் என்றும், ஆனால் Nairobi, அந்த நபர் மீது ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிகிறது.

முன்னர் பல முறை அந்த நபர் Nairobiயை தொந்தரவு செய்ததும் , அவரது மொபைல் போனை பிடுங்கி அவர் யாருடன் பேசுகிறார் என அறிய முற்பட்டதும், எங்கு போனாலும் அவரை பின் தொடர்வதும், சில நேரங்களில் அவரை தாக்கியதும்கூட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்த நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதம் 9ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார். நீதிமன்றம் அவரது பெயரை வெளியிட தடைவிதித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்