காரில் சென்றுகொண்டிருந்த நபர் திடீர் வெள்ளத்தில் பலி! வரலாறு காணாத மழையை சந்தித்த நாடு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் வரலாறு காணாத கனமழை பெய்ததில், இதுவரை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அல்மேரியா பகுதியில் சுரங்கப்பாதை வழியாக காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கி காரில் இருந்தபடியே உயிரிழந்தார்.

EPA

மழை காரணமாக சுமார் 3,500க்கும் மேற்பட்டோர் தங்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர். அத்துடன் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது.

ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், மழை சற்று ஓய்ந்ததால் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியுள்ளது.

Reuters

தொற்று நோய் ஏற்படுவதை தவிர்க்க தேங்கியிருக்கும் மழை நீரை கட்டிடங்களில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இதுவரை வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசரகால ராணுவ பிரிவு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Splash News

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்