இரண்டு கிலோ பிளாஸ்டிக் குப்பை கொடுத்தால் ஒரு கிலோ அரிசி! அசத்தும் நாடு

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸ் நாட்டில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசிடம் ஒப்படைக்கும் மக்களுக்கு, ஒரு கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால், கடல்வாழ் உயிரினங்கள் அண்மை காலமாக உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளை அதிகளவில் வெளியேற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், பிலிப்பைன்ஸ் முதலிடம் வகிப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அத்துடன் அந்நாட்டில் திடக்கழிவு குறித்த சட்டங்கள் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பிலிப்பைன்ஸ் நாடு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்காக புதிய முயற்சியை எடுத்துள்ளது. தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கவும், வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கவும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்திட்டத்தின்படி, மக்கள் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அரசிடம் ஒப்படைத்தால், அவர்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும். இந்த திட்டத்தினால் ஏழைமக்கள் பெருமளவில் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

ஏனெனில், அந்நாட்டில் ஒரு கிலோ அரிசி இந்திய மதிப்பில் ரூ.50க்கு விற்கப்படுகிறது. இதற்கிடையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க, அதனை மறுசுழற்சி செய்யும் பணியிலும் பிலிப்பைன்ஸ் அரசு ஈடுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...