வெளிநாட்டில் தமிழக இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை... என்ன நடந்தது தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டில தான் துன்புறுத்தப்படுவதாகவும், என்னை காப்பாற்றும் படி தமிழக இளைஞன் ஆடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவர் தமிழகம் திரும்பியுள்ளார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவர் கடந்த மாதம் 12-ஆம் திகதி மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

ஆனால் உறுதியளித்த படி உரிய பணிகளை வழங்காமல், வேறு வேலைகள் கொடுத்து துன்புறுத்துவதாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஊருக்கு திரும்ப அனுமதிக்கவில்லை, தன்னை மீட்டுச் செல்ல இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் படி மிகுந்த வேதனையுடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த ஆடியோ அனைத்து செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பான நிலையில், அதன் எதிரொலியாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர், குறித்த இளைஞன் விரைவில் இந்தியாவிற்கு அழைத்துவரப்படுவார் என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நந்தகுமார் நேற்று மலேசியாவில் இருந்து விமானத்தின் மூலம் திருச்சி திரும்பினார். தற்போது பாதுகாப்பு காரணமாக திருப்பூரில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் இருப்பதாகவும், அவரிடம் அங்கு என்ன பிரச்சனை நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்