கார் ஜன்னலை மூடி பெற்ற தாயை கொன்ற 2 வயது குழந்தை

Report Print Basu in ஏனைய நாடுகள்

உக்ரைனில் இரண்டு வயது குழந்தை எதர்ச்சியாக கார் ஜன்லை மூடி பெற்ற தாயை கொன்ற சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Staroe Selo கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான Yulia Sharko என்ற தாயே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று தனது 21 வது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடிய Yulia Sharko, BMW E34 காரில் பயணித்துள்ளார். காருக்கு வெளியே இருந்த Sharko, காரின் முன் கதவின் ஜன்னல் பாதி மூடி இருந்த நிலையில், உள்ளே தலையை விட்டு இருக்யைில் இருந்த 2 வயது குழந்தையை தூக்க முயன்றுள்ளார்.

(Image: east2west news)

இதன் போது குழந்தை எதர்ச்சயாக தானகவே ஜன்னலை மூடும் பட்டனை அழுத்த Sharko-வின் கழுத்தை ஜன்னல் கண்ணாடி இறுக்கியுள்ளது. இதனால் Sharko-வின் மூளைக்கு செல்லும் நரம்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கார் ஜன்னலில் சிக்கி இருந்த Sharko-வை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர்,Artur, காரின் கண்ணாடியை உடைத்து மயங்கிய நிலையில் இருந்து Sharko-வை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

(Image: east2west news)

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த Sharko எட்டு நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Sharko-Artur தம்பதிக்கு 4 வயதில் Margarita மற்றும் 2 வயதில் Arianna என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்