சொந்த மண் வாசம் தெரியாமல் வெளிநாட்டில் வாழும் தமிழச்சி! அவரை காதலித்து கரம் பிடித்த தமிழன்! அசத்தலான புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

தமிழகத்தை சேர்ந்த இளைஞரும் , சிங்கப்பூரை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்த நிலையில் தமிழ் கலாச்சார முறைப்படி அவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஈரோட்டில் உள்ள பசுவபட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (35). இவர் சிங்கப்பூரில் காற்றாலை மின்சார உற்பத்தி நிறுவனத்தில் சீனியர் ஆராய்ச்சி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். மோகன்குமாருக்கும் சிங்கப்பூரில் வசிக்கும் தனலட்சுமி என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

தனலட்சுமி குடும்பத்தினர் நாமக்கல் மாவட்டம் சேர்ந்தவர்கள். ஆனால் 3 தலைமுறைகளாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார்கள். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்கும் தெரியவந்ததை தொடர்ந்து 2 பேரின் வீட்டிலும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து மோகன்குமாருக்கும், தனலட்சுமிக்கும் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்தார்கள்.

இதற்காக தனலட்சுமி வீட்டை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக கோவை வந்து தங்கியிருந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவர்களுடைய திருமணம் தமிழர் பாரம்பரிய முறையில் நடைபெற்றது.

மணமகன் பட்டு வேட்டி-சட்டையும், மணமகள் பட்டு புடவையும் அணிந்திருந்தார். அதன்பின்னர் முகூர்த்த நேரத்தில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

இதுபற்றி மணமகள் தனலட்சுமி கூறுகையில், நாங்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், நான் சிங்கப்பூரில் தான் பிறந்து வளர்ந்தேன்.

தமிழகத்துக்கு வந்ததே இல்லை. தமிழகத்தின் மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகுமுறை எனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்