வயிற்று வலியால் துடித்த 52 வயது நபர்... அறுவை சிகிச்சையில் என்ன இருந்தது தெரியுமா? வெளியான புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்லாந்தில் வயிற்று வலியால் துடித்த நபரின் வயிற்றில் இருந்து சுமார் 5 கிலோ எடை கொண்ட கட்டி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த 52 வயதான நபர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் உடனடியாக Bueng Kan பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இதனால் அவரை மருத்துவர்கள் அவரை ஸ்கேன் எடுத்து பார்க்கும் படி கூறியுள்ளனர், அதன் படி சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவரின் வயிற்றின் உள்ளே கட்டி இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு மேல் விட்டால் கல்லீரல் மற்றும் செரிமான பகுதியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், உடனே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 90 நிமிடம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், 35 செ.மீற்ற நீளம், 32 செ.மீற்றர் அகலம் என சுமார் 5 கிலோவிற்கு மேல் எடை கொண்ட கட்டியை நீக்கியுள்ளனர்.

அதன் பின் அந்த கட்டி புற்றுநோய் கட்டியா என்பதை அறிவதற்காக ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியுள்ளனர். மருத்துவர்கள் கட்டியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்