பொது இடத்தில் சிகரெட் பிடிக்கும் சிறுவனை கண்டு திகைத்த மக்கள்: உண்மை தெரியவந்தபோது...

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

துருக்கியில் கால் பந்து போட்டி ஒன்றின்போது மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் புகை பிடிக்கும் காட்சி கவனம் ஈர்த்தது.

வெளியான ஒரு வீடியோவில், அந்த சிறுவன் எந்த தயக்கமுமின்றி மற்றொரு சிறுவனின் அருகில் அமர்ந்து புகை பிடிப்பதை வீடியோ எடுப்பவர் கவர் செய்ய, அது அங்கிருந்த திரையில் தெரிவதைக் காண முடிந்தது.

சமூக ஊடகம் ஒன்றில் வெளியான அந்த வீடியோ ஒரு பக்கம் வைரலாக, மறுபக்கம், பலரும் அந்த சிறுவனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால், அது ஒரு சிறுவன் அல்ல என்று தற்போது தெரியவந்துள்ளது.

சிறுவன் போல் தோற்றமளிக்கும் அந்த நபருக்கு வயது 36! அத்துடன் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தவர் மக்கள் நினைத்ததுபோல் அந்த ‘பையனின்’ நண்பன் இல்லை, அவரது மகன்.

என்றாலும், துருக்கியில் பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே வீடியோ மூலம் பிரபலமானாலும், அவருக்கு 13 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட இருப்பது உறுதி.

மற்றொருபக்கம், அந்த விளையாட்டின்மூலம் கிடைக்கும் வருவாய், இரத்தப்புற்றுநோய், டவுன் சிண்ட்ரோம் மற்றும் ஆட்டிசம் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செலவிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்