ஈராக்கில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் தீவு: 40 டன் வெடிகுண்டுகளை வீசி துவம்சம் செய்த அமெரிக்க போர் விமானங்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வட ஈராக் பகுதியில் டைகிரிஸ் நதியின் நடுவில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் தீவு ஒன்றின்மீது அமெரிக்கக் கூட்டுப்படையின் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தின.

செவ்வாயன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 டன் அளவுக்கு குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

டைகிரிஸ் நதியின் நடுவில் அமைந்திருக்கும் Qanus தீவு என்ற பகுதி, ஐ.எஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருக்க வசதியாக அமைந்துள்ளது.

அந்த தீவில் உள்ள அடர்ந்த காடுகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் வாய்ப்பை இல்லாமல் ஆக்குவதற்காகவும், அவர்கள் சிரியாவுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகவும் இந்த வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கனுடன் சமாதான பேச்சு வார்த்தைகளை ரத்து செய்ய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் Qanus தீவு முழுவதும் வரிசையாக குண்டுகள் வெடித்துச் சிதறுவதைக் காணலாம்.

இன்னொரு பக்கம், Qanus தீவில் இன்னமும் தீவிரவாதிகள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அவர்களை அழிப்பதற்காக, கூட்டுப்படைகள் தரை வழியாகவும் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்