அமெரிக்காவின் ஒப்பந்தத்தை மீறி யுரேனியம் செறியூட்டலை அதிகரிக்கும் ஈரான்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஈரான் அதிகரிக்கிறது.

ஈரான் நாடு அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுகின்ற செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அந்த தகவல்களை ஈரான் தற்போது உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் அணு சக்தி அமைப்பின் செய்தி தொடர்பாளர் பெஹ்ரூஸ் கமல்வாண்டி கூறுகையில்,

‘நடான்ஸ் நகரில் உள்ள ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையத்தில், அதி நவீன எந்திரங்கள் மூலம் யுரேனியம் செறிவூட்டல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கடந்த ஆண்டு ஒருதலைபட்சமாக அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய நிலையில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது நடவடிக்கை இது.

இந்த ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்ருந்த எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வரம்புகளை நாங்கள் உயர்த்த தொடங்கி உள்ளோம். நடான்ஸ் நகர யுரேனியம் செறிவூட்டும் மையத்தில் உள்ள எந்திரங்கள், முந்தைய எந்திரங்களின் திறனை விட பல மடங்கு அதிகம் திறன் கொண்டவை ஆகும்.

இவை 6ஆம் திகதி செயல்படத் தொடங்கி விட்டன. எதிர்த்தரப்பினர் (அமெரிக்கா) தங்கள் வாக்குறுதிகளை செயல்படுத்தாத நிலையில், ஈரான் மட்டும் தனது வாக்குறுதிகளின்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

எங்கள் யுரேனியம் கையிருப்பு விரைவாக அதிகரிக்கும். இதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம். அதே நேரத்தில் சர்வதேச அணுசக்தி முகமை, எங்கள் அணுசக்தி திட்டத்தை கண்காணிப்பதை நாங்கள் அனுமதிப்போம்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கை தங்களுக்கு வியப்பை தரவில்லை என்றும், அவர்கள் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி விட்டனர் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்