நிர்வாணமாக காரில் படுத்தபடி சென்ற இளம் பெண்! என்ன காரணம்? வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஸ்பெயினின் பலேரிக் தீவில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக காரில் மேல் அமர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்பெயினின் கிழக்கு பிராந்தியமான பலேரிக் தீவுகளில் அமைந்துள்ள Ibiza's Marina-வில் சிவப்பு நிற பெராரே கார் ஒன்றில் பெண் ஒருவர் நிர்வாணமாக அமர்ந்தபடி செய்கை செய்கிறார்.

அந்த காரின் டிரைவர் புகை பிடித்த படி காரை ஓட்டிச் செல்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், அந்த வீடியோவை வைத்து பொலிசார் இவர்கள் யார் என்பது குறித்து தேடி வருகின்றனர்.

அதே சமயம் உள்ளூர் ஊடகம் ஒன்று, இவர்கள் இருவரின் முகமும் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியிருந்தால், அவர்கள் விரைவில் பிடிபட்டுவிடுவார்கள், அப்படி பிடிபட்டால் 458 பவுண்ட் அபராதமும், பொறுப்பற்ற வகையில் வாகனம் ஓட்டியதற்காக டிரைவரின் லைசென்சில் 6 புள்ளிகள் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

பொது இடத்தில் அதுவும் சுற்றுலாப்பயணிகள் பலரும் வந்து செல்லும் இடத்தில் இது போன்று அவர்கள் நடந்து கொண்டது முகம் சுழிக்கும் வகையிலே உள்ளது. இது குறித்து போக்குவரத்து நிர்வகிக்கும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அவர்கள் இது குறித்து காவல் துறையினருடன் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக கர சபை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் இபிசாவில் இதுபோன்ற பல கார்கள் இல்லை குறித்த டிரைவர் விரைவில் பிடிபடுவார் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அப்படி அவர்கள் அடையாளம் காணப்பட்டதும், எந்த விதிகள் மீறப்பட்டன என்பதையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய தண்டனையையும் காவல்துறை தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்