வெளிநாட்டில் இந்திய பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்... எத்தனை மில்லியன் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டில் இந்தியாவைச் பெண் ஒருவர் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பின் எண்ணை வைத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 1 மில்லியன் டொலர் விழுந்துள்ளதால், அவர் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

இந்தியாவை பூர்விமாக கொண்டவர் பீஜல். 34 வயதான இவர் துபாயில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் Dubai Duty Free Millennium Millionaire-யில் Finest Surprise Series 308-ற்கான டிக்கெட் வாங்கியுள்ளார்.

இதற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றுள்ளடு. இதில் பீஜல் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக விழுந்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், பீஜல் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பின் எண்ணை வைத்து, அந்த லாட்டரியை வாங்கியுள்ளார்.

அது அவருக்கு அதிர்ஷ்டமாக மாறியுள்ளது.

இது குறித்து பீஜல் கூறுகையில், என்னால் பேச முடியவில்லை, இன்ப அதிர்ச்சியில் இருக்கிறேன், Dubai Duty Free-க்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

இதை வைத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று கேட்ட போது, பரிசு விழுந்துவிட்டது என்றவுடன் எனக்கு வந்த முதல் ஞாபகம் எதாவது தொண்டு நிறுவனத்திற்கோ அல்லது இயலாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார்.

பீஜல் கடந்த ஜுலை மாதம் 25-ஆம் திகதி இந்தியாவிற்கு வந்த போது, இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் Dubai Duty Free-யின் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருவதாகவும், இதில் பீஜல் இந்தியாவின் 148-வது வெற்றியாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்