இளவயதில் துஸ்பிரயோகத்திற்கு இரை... 30 ஆண்டுகள் சிறை தண்டனை: யுவதியின் வாழ்க்கையை மாற்றிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கூறி 30 ஆண்டு சிறை விதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தற்போது அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமது வாழ்க்கையில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமெரிக்க நாடுகளில் கருக்கலைப்பு முற்றாக தடை செய்யப்பட்ட நாடுகளில் எல் சால்வடோரும் ஒன்று.

21 வயதான ஈவ்லின் ஹெர்னாண்டஸ் என்பவர் கருக்கலைப்பு குற்றச்சாட்டில் சிக்கி 2 ஆண்டுகளும் 9 மாதமும் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். நாடு முழுவதும் ஈவ்லினுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில்,

குறித்த வழக்கை மறு விசாரணைக்கு அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்டது. எல் சால்வடோர் நாட்டை பொறுத்தமட்டில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு மேற்கொண்டதாக நிரூபணமானால் கொலை குற்றம் சுமத்தப்படும்.

ஈவ்லின் விவகாரத்தில் அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளது, அவரது குடும்பத்தாரையும் உலகெங்கிலும் உள்ள சமூக ஆர்வலர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு துஸ்பிரயோகத்திற்கு இரையான ஈவ்லின் பிரசவ வலியால் துடித்தபோது அவரது கருவுக்கு 32 வாரமே ஆகியிருந்தது. தொடர்ந்து பொது கழிவறையில் ஈவ்லின் பிரசவித்துள்ளார்.

உயிரற்ற அந்த கருவும் பின்னர் மீட்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், ஈவ்லினும் அவர் தாயாரும் ஒன்றாக, ஈவ்லின் கருவுற்றதே தங்களுக்கு தெரியாது என சாதித்துள்ளனர்.

ஆனால் அரசு தரப்பு இதை நம்ப மறுத்ததுடன், ஈவ்லின் மீது வழக்குப் பதிந்தது.

மட்டுமின்றி தமது பிள்ளையை காக்கத் தவறியதாகவும் ஈவ்லின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 80 சதவிகித கத்தோலிக்க கிறிஸ்தவர்களை கொண்ட எல் சால்வடோர் நாட்டில் கருக்கலைப்பு மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனால் மொத்தம் 6 மில்லியன் ஜனத்தொகையை கொண்ட மத்திய அமெரிக்க நாடுகளில் ஆண்டுக்கு 25,000 பெண்கள் பாலியல் துஸ்பிரயோகத்தால் கருவுறும் நிலைக்கு தள்ளப்படுவதாக ஆய்வறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்