ஏவுகணை சோதனையில் கொடூரமாக இறந்த ஆராய்ச்சியாளர்கள்! உண்மையை மறைக்கும் ரஷ்யா

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ரஷ்ய அணுசக்தி ஏவுகணை சோதனையின் போது 5 ஆயுத விஞ்ஞானிகள் பயங்கரமான, ஆபத்தான காயங்களுடன் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் வடக்கு பகுதியில் நியோனோக்ஸா கிராமத்திற்கு அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.

இதனால் அணுக்கதிர்வீச்சு ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த விபத்தில் 5 ஆயுத விஞ்ஞானிகள் விவரிக்க முடியாத பயங்கரமான காயங்களுடன் உயிரிழந்திருப்பதாக, வெடிப்பு நடந்த இடத்திற்கு அருகிலுள்ள குடியேற்றமான நியோனோக்சாவில் உள்ள கிராம மக்களுக்கு உறுதியளிக்க அனுப்பப்பட்ட, ஒரு மூத்த ரஷ்ய இராணுவ அதிகாரி கூறிய வார்த்தைகளின் கசிந்த வீடியோவில் இருந்து வெளியாகியுள்ளது.

தெளிவில்லாத அந்த வீடியோவில், சோதனை செய்யப்பட்ட ஏவுகணை "டூம்ஸ்டே ஆயுதம்" புரேவெஸ்ட்னிக் - ஸ்கைஃபால் என்றும் அழைக்கப்படுகிறது - ஒரு அணு ஏவுகணை எல்லையில்லாத வரம்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி மிதவை கப்பலில் அவர்கள் இருந்த போது அடியிலிருந்து வெடித்தது. காற்றில் மிதவை கப்பல் உயர்த்தப்பட்டதாலே அவர்கள் கொல்லப்பட்டனர். அதில் இருந்தவர்களுக்கு பயங்கரமான காயங்கள் ஏற்பட்டிருந்தது என மட்டுமே பேசியுள்ளார். அதன் தன்மை குறித்து மேலும் குறிப்பிடவில்லை.

விபத்தில் ஐந்து அணு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 12 ம் திகதி நடந்த நியோனோக்சா கூட்டத்தில் அருகிலுள்ள வெள்ளைக் கடற்கரையில் கடுமையான கதிர்வீச்சு ஆபத்து இருப்பதால் உள்ளூர் மக்கள் கதவுகளை மூடி வைக்குமாறு அவர் எச்சரிக்கிறார்.

இராணுவ அதிகாரி உள்ளூர் மக்களை அமைதிப்படுத்த முயல்கிறார். அவர்கள் ஒரு புதிய செர்னோபில் பகுதியில் வசிக்கவில்லை என்பதை உறுதி செய்கிறார்.

அதே சமயம் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் உண்மை என ஒப்புக்கொள்வதோடு, கடற்கரைக்கு சென்றால் கதிர்வீச்சு அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்.

பெயரிடப்படாத ஏவுகணை இயந்திரம் சம்பந்தப்பட்ட ஒரு சோதனை தவறாக நடந்ததாக அதிகாரி ஒப்புக் கொண்டார். மேலும் அந்த நேரத்தில் எந்த ஒரு மேற்கத்திய உளவு செயற்கைகோள்களும் அப்பகுதியில் பறக்கவில்லை.

ஒரு அசாதாரண நிலைமையின் விளைவாக ஒரு வெடிப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஒரு அணு வெடிப்பு அல்ல, வெடிக்கும் தன்மை கொண்ட பொருளாலே அந்த வெடிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு தான் கதிரியக்க ஐசோடோப்புகளிலிருந்து மாசு வெளியிடப்பட்டது என்பதை அவர் அந்த வீடியோவில் ஒப்புக்கொள்கிறார்.

இந்த வெடிப்பில் கொல்லப்பட்ட ஐந்து பேரும் ரஷ்யாவின் மிக மூத்த அணு விஞ்ஞானிகளில் ஒருவரான வியாசஸ்லாவ் யானோவ்ஸ்கி (71), ரகசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் வியாசெஸ்லாவ் லிப்ஷேவ் (40), ஒரு முன்னணி மின்னணு பொறியியலாளர் அலெக்ஸி வ்யுஷின் (43), ஒரு உயர் ஆற்றல் ஃபோட்டான் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் சோதனை பொறியாளரான 45 வயது செர்ஜி பிச்சுஜின் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்