உலகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு: வெளியான பட்டியல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சர்வதேச அளவில் தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்கா மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை தங்கம் நிர்ணயிப்பதால் அதனை வாங்கி குவிப்பதில் பல நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றது.

சர்வதேச அளவில் அமெரிக்கா அதிகளவு தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளதாக உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.

நடப்பாண்டில் இதுவரை அமெரிக்கா 8,133.5 மெட்ரிக் டன் அளவிற்கு தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கிறது.

இரண்டாவதாக ஜேர்மனி 3,371.8 மெட்ரிக் டன் அளவிற்கும், மூன்றாவதாக இத்தாலி 2,451.8 மெட்ரிக் டன் அளவிற்கும் தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கிறது.

நான்காவதாக பிரான்ஸ் 2,436.1 மெட்ரிக் டன் அளவிற்கும், ரஷ்யா 2,207 மெட்ரிக் டன் அளவிற்கும், சீனா 1,926.5 மெட்ரிக் டன் அளவிற்கும் தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கின்றன.

இதை தொடர்ந்து சுவிட்சர்லாந்து 1,040 மெட்ரிக் டன் அளவிற்கும், ஜப்பான் 765.2 மெட்ரிக் டன்னும் தங்கத்தை கையிருப்பாக வைத்திருக்கின்றன.

உலகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருப்பதில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியா இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டின் ஆகஸ்ட் வரை 618.2 மெட்ரிக் டன் அளவிற்கு தங்கத்தை கையிருப்பு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதை தொடர்ந்து பத்தாவது இடத்தில் நெதர்லாந்து 612.5 மெட்ரிக் டன் அளவிற்கு தங்கத்தை கையிருப்பதாக வைத்துள்ளது.

தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகள்:

  1. United States : 8,133.5 Tonnes
  2. Germany : 3,371.0 Tonnes
  3. Italy : 2,451.8 Tonnes
  4. France : 2,436.0 Tonnes
  5. Russia : 1,909.8 Tonnes
  6. China : 1,842.6 Tonnes
  7. Switzerland : 1,040.0 Tonnes
  8. Japan : 765.2 Tonnes
  9. India : 618.2 Tonnes
  10. Netherlands : 612.5 Tonnes

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்