நடுவானில் ரஷ்ய பயணிகள் விமானத்தை சூழ்ந்த சுவிஸ் போர் விமானங்கள்: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Basu in ஏனைய நாடுகள்

பிரான்ஸ் நோக்கி சென்ற ரஷ்ய விமானத்தை திடீரென சுவிஸ் போர் விமானங்கள் சூழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புடின்-மக்ரோன் உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிகாரிகளும் பத்திரிகையாளர்களும் ரஷ்ய அரசாங்கத்தின் Il-96 விமானம் மூலம் பிரான்சுக்கு பயணித்துள்ளனர். விமானம், சுவிஸ் வான்வெளியில் பயணித்த போது திடீரென விமானத்தின் இரு பக்கங்களிலும் இரண்டு சுவிஸ் விமானப்படையின் போர் விமானங்கள் சூழ்ந்துள்ளது.

பயணிகளில் இருந்த ரஷ்ய ஜனாதிபதி புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, இதுகுறித்து சுவிஸிற்கு நாங்கள் தகவல் அளித்தோம், தாங்கள் நாட்டிற்குள் வரும் விருந்தினரை வரவேற்கும் விதம் என சுவிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

சுவிஸ் வான்வெளியைக் கடந்து பிரான்சுக்குச் செல்லும் வரை, இரண்டு சுவிஸ் போர் விமானங்களும் ரஷ்ய விமானத்தை சுமார் ஐந்து நிமிடங்கள் அழைத்துச் சென்றுள்ளது. இந்த தருணத்தை பயணிகள் சிலர் படமாக்கியுள்ளனர்.

ரஷ்ய அரசாங்க Il-96 விமானம், அதிகாரிகள் மற்றும் பத்திரிகைப் படையினருடன், திங்களன்று மார்செல்ஸுக்குப் பறந்தது, அங்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்திக்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்