ஏற்கனவே நீ குண்டாக இருக்கிறாய்... காதலனை குத்தி கொன்ற காதலி!

Report Print Abisha in ஏனைய நாடுகள்

ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்த காதலனை, காதலி குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில், ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒன்று கடைவீதி வழியாக நடந்து சென்ற கொண்டிருந்தது. அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால், காதலி காதலனிடம் ஐஸ்கிரீம் வாங்கி தர கோரியுள்ளார்.

ஆனால் காதலனோ ஏற்கனவே நீ குண்டாக இருக்கிறாய் எனவே வாங்கி தர இயலாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ஐஸ்கிரீ வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் எடை குறித்து கோலி செய்ததால் ஆத்திரத்தில் இருந்த காதலி அமைதியாக அவருடன் நடந்து சென்ற நிலையில், அருகில் இருந்த கடையில் இருந்து கத்திரிகோல் ஒன்று வாங்கி வந்து, காதலன் வயிற்றில் நான்கு முறை குத்தி உள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த காதலின் சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

அங்கிருந்து தப்ப முயன்ற காதலியை பொலிசார் மடக்கிபிடித்து கைது செய்தனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்