வயிற்று வலியால் துடித்த 6 வயது சிறுவன்... ஸ்கேன் ரிப்போர்ட்டில் என்ன இருந்தது தெரியுமா? எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் வயிற்று வலியால் துடித்த ஆறு வயது சிறுவனை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றின் உள்ளே இருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சீனாவைச் சேர்ந்த 6 வயது சிறுவன்(பெயர் தெரிவிக்கப்படவில்லை) சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார்.

இதனால் சிறுவன் உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறான். அப்போது அவரது வயிற்றுப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் உள்ளே ஏதோ செயின் போன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏனெனில் அது சிறுவனின் குடலில் பாதிப்பை ஏற்படுத்தி ஆபத்தில் கொண்டு போய் முடித்துவிடும் என்பதால், உடனடியாக இது குறித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் எதிர்பார்த்த போது, அது செயின் இல்லை, 64 காந்த மணிகள் கொண்ட ஒரு விளையாட்டு செயினை வயிற்றிலிருந்து நீக்கியுள்ளனர்.

இப்போது சிறுவன் நல்ல நிலையில் இருக்கிறான்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகத்திற்கு, சிறுவனுக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் கூறுகையில், நாங்கள் முதலில் சிறுவனின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது, ஏதோ செயின் போது இருப்பதை உணர்ந்தோம்.

அதன் பின் சிறுவனிடம் செயின் எதையாவது விழுங்கினாயா? என்று கேட்டோம், அப்போது அவன் ஆம் என்றார். இதற்கிடையில் அவருடைய அம்மா 64 காந்த மணிகள் கொண்ட ஒரு செயின் வாங்கிக் கொடுத்ததாக கூறினார்.

இதனால் நாங்கள் மீண்டு சிறுவனிடம் அதைத் தான் விழுங்கினாயா என்று கேட்டோம், சிறுவனும் ஆம் என்று கூறினான்.

அதன் பின் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றிலிருந்து நீக்கிவிட்டோம். இந்த காந்த மணிகள் அப்படியே இருந்திருந்தால் குடல்களை சிதைத்திருக்க வாய்ப்புண்டு, இதனால் சிறுவன் ஆபத்தான கட்டத்திற்கு சென்றிருப்பான் என்று மருத்துவர் கூறினர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்