ஒற்றைக் கண்ணால் சீனாவை உலுக்கும் ஹாங்காங் மக்கள்: அதிரவைக்கும் புகைப்படங்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சீனாவின் அடக்குமுறைக்கு எதிராக ஹாங்காங் மக்கள் தற்போது நூதன போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சீனாவின் குற்றவாளிகள் பரிமாற்ற சட்டத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஹாங்காங் மக்கள்,

தற்போது தங்களின் ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு, சீன அரசின் வன்முறைகளுக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஹாங்காங் மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

போராட்டக்காரர்களை குறிவைத்து மிக அருகில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் யுவதி ஒருவருக்கு அவரது வலப்பக்க கண் பார்வை பறிபோயுள்ளது. இதை போராட்டத்தில் வெளிப்படுத்தும் வகையில்,

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் தங்கள் வலப்பக்க கண்ணை மூடிக்கொண்டு தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹாங்காங் மக்கள் இதற்கு முன்னரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய போராட்டங்களின் போது அடையாளங்களை பயன்படுத்தியுள்ளனர்.

சீனாவுக்கு எதிராக முதல் 72 நாட்கள் நீண்டு நின்ற அந்த போராட்டத்திற்கு ஹாங்காங் மக்கள் மஞ்சள் வண்ண குடையை பயன்படுத்தினர்.

தற்போது ஒப்படைப்பு மசோதாவுக்கு எதிராகவும், சீனாவின் அடக்குமுறைக்கு எதிராகவும் வலப்பக்க கண்ணை மூடிக்கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஹாங்காங் பிராந்தியத்தில் உள்ள 75 லட்ச மக்கள் தொகையில் வெறும் 11 சதவிகித மக்கள் மட்டுமே தங்களை சீனர்கள் என அடையாளப்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த ஒப்படைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், ஹாங்காங் பிராந்தியம் சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும் என எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்