பிரித்தானியா விடுவித்த டேங்கருக்கு ஆபத்து... அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஈரானிய எண்ணெய் டேங்கரை திறந்த கடல் பகுதியில் வைத்து பறிமுதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் சிக்கிய ஈரானிய டேங்கரை, மேலும் தடுத்து வைக்க வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையை பிரித்தானியா பிரதேசமான ஜிப்ரால்டர் நிராகரித்தது.

இதனையடுத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, திங்களன்று ஜிப்ரால்டரை விட்டு வெளியேறிய கிரேஸ் 1 என அழைக்கப்பட்ட அட்ரியன் தர்யா 1 ஈரானிய டேங்கர், ஜிபிஎஸ் டேட்டாவின் படி கிரேக்கத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது.

ஜிப்ரால்டரில் இருந்து டேங்கர் பயணம் செய்த பின்னர் அமெரிக்கா தனது பறிமுதல் கோரிக்கையை நிரைவேற்ற முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மெளசவிசவி கூறியதாவது, இதுபோன்ற நடவடிக்கை திறந்த கடல்களில் பயணிக்கும் கப்பல் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

உத்தியோகபூர்வ தொடர்புகள், குறிப்பாக சுவிஸ் தூதரகம் மூலம் நாங்கள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம் என கூறினார். மேலும், ஈரானால் கைப்பற்றப்பட்ட பிரித்தானியாவின் ஸ்டீனா இம்பேரோ டேங்ரை விடுவிக்க நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்