ஈரானின் அடுத்தடுத்த ரகசிய திட்டம்: பிரித்தானியாவில் இருந்து விடுவிக்கப்பட்ட டேங்கரின் ஜிபிஎஸ் பாதை சிக்கியது

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஜிப்ரால்டர் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ஈரானிய எண்ணெய் டேங்கர் கப்பல் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த யூலை மாதம் முதல் ஈரான்-பிரித்தானியா இடையே மைய பிரச்சினையாக இருந்து வந்த ஈரானிய எண்ணெய் டேங்கரான கிரேஸ் 1 ஞாயிற்றுக்கிழமை இரவு ஜிப்ரால்டர் துரைமுகத்திலிருந்து புறப்பட்டது. கிரேஸ் 1 என அழைக்கப்பட்ட டேங்கர் கப்பலின் பெயர் அட்ரியன் தர்யா 1 என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பிரித்தானியாவுக்கான ஈரானின் தூதர் ஹமீத் பெய்தினெஜாட், முன்பு கிரேஸ் 1 என அழைக்கப்பட்ட அட்ரியன் தர்யா 1 கப்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், இரண்டு பொறியியல் குழுக்கள் ஜிப்ரால்டருக்கு விரைந்துள்ளதாக ட்விட்டரில் கூறினார்.

கப்பல் கண்காணிப்பு சேவை மையமான மரினெட்ராஃபிக் என்ற இணையதளம் மூலம் கப்பலின் ஜி.பி.எஸ் டேட்டாவை ஆய்வு செய்ததில், ஈரான்-கொடியிடப்பட்ட அட்ரியன் தர்யா 1, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்னதாகவே ஜிப்ரால்டரிலிருந்து புறப்பட்டது தெரியவந்தது. எனினும், கப்பல் எங்கு செல்கிறது என்ற தகவல் உடனடியாகத் தெரியவில்லை.

சமீபத்தில் கப்பலின் பாதையை ஜி.பி.எஸ் டேட்டா மூலம் ஆய்வு செய்ததில், ஜிப்ரால்டர் வைத்திருந்த ஈரானிய டேங்கர் துறைமுகத்தை விட்டு வெளியேறி, கிரேக்க தீவான கலாமாட்டாவுக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று கடல் கண்காணிப்பு தகவல்கள் திங்களன்று காட்டின. கப்பல் கிரீஸ் நாட்டிற்கு தான் செல்கிறது என்பது குறித்து இதுவரை ஈரான் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

கடந்த யூலை 4 ம் திகதி ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளை மீறி சிரியாவிற்கு எண்ணெய் எடுத்துச் செல்வதாக சந்தேகத்தின் பேரில் மத்தியதரைக் கடல் பகுதியான ஜிப்ரால்டரில் வைத்து ஈரானின் கிரேஸ் 1 டேங்கரைக் பிரித்தானியா கடற்படையினர் கைப்பற்றினர். ஆனால், குறித்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்