உகாண்டாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து தீப்பிடித்தது- 20 பேர் பலி

Report Print Kavitha in ஏனைய நாடுகள்

கென்யாவில் இருந்து காங்கோவிற்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு டேங்கர் லாரியும் சரக்கு வாகனமும் மோதி பெட்ரோல் டேங்கர் வெடித்து தீப்பிடித்ததுள்ளது.

குறித்த விபத்தில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

உகாண்டாவின் மேற்கு பகுதியில் உள்ள ருபிரிசி மாவட்டத்தில், லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால் சாலையில் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் போது இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து. அருகில் உள்ள கடைகள், சிறிய ஸ்டால்களும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

பின்னர் விபத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன.

குறித்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்