சிறைப்பிடிக்கப்பட்ட ஈரான் கப்பல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சிறைப்பிடிக்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்த 24 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சிரியாவுக்கு பெட்ரோலிய எண்ணெயை ஈரான் கப்பல் கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டி கிரேஸ்-1 என்ற கப்பலை இங்கிலாந்து அரசு சிறைபிடித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஈரான் கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 24 பேரை விடுவிக்க பிரித்தானிய அரசுடன் பேசுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய தூதரக அதிகாரி பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்திய மாலுமிகள் 24 போரையும் இங்கிலாந்து அரசு விடுவித்தது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் வழக்கை கைவிட பிரித்தானிய அரசு முன்வந்தாலையே ஊழியர்களை விடுவிக்க தயாரானதாகவும்,

இருப்பினும் கப்பலை விடுவிக்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்