விஸ் ஏர் விமானம் கடத்தப்பட்டதாக பீதி.. நடுவானில் விமானி அறையை உடைத்த மர்ம நபர்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஹங்கேரியிலிருந்து ஐஸ்லாந்துக்கு பயணித்த பயணிகள் விமானத்தை நடுவானில் மர்ம நபர் ஒருவர் கடத்த முயன்றதாக தகவல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பணிகள் விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து நோர்வே தென்மேற்கு பொலிஸ் வெளியிட்ட தகவலின் படி, நடுவானில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது 60 வயதுடைய ஐஸ்லாந்தை சேர்ந்த நபர் திடீரென விமானி அறையை உடைத்து நுழைய முயன்றதாக அவர்களுக்கு தகவல் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

எனினும், விமானக்குழுவினர் குறித்த நபரை சமாளித்துள்ளனர், இதனையடுத்து, விமானத்தை அவசரமாக ஸ்டாவஞ்சர் விமான நிலையத்தில் தரையிறக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்கள் ஸ்டாவஞ்சர் விமான நிலையத்திற்கு விரைந்துக்கொண்டிருக்கிறோம் என நோர்வே பொலிசார் ட்விட் செய்தனர்.

ஒரு மணிநேரத்திற்கு பின் நோர்வே பொலிசார் பதிவிட்ட ட்விட்டில், விமானம் தரையிறங்கிவிட்டது. விமானி அறையை தகர்த்து நுழைய முயன்ற 60 வயதுடைய ஆண் பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட பயணி குடிபோதையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், தற்போது வரை நபர் குறித்த தகவலோ, எதற்காக விமானி அறையை தகர்க்க முயன்றார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்