நடுவானில் எரிந்த விமானம்... உயிர் பயத்தில் கதறிய பயணிகள்: விமானிகள் எடுத்த துணிச்சலான முடிவு

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று அவசர அவசரமாக சோளக் காட்டில் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

226 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் Zhukovsky விமான நிலையத்திலிருந்து Simferopol-க்கு பறந்த யூரல் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏ -321 விமானத்திலே தீப்பிடித்துள்ளது.

நடுவானில் விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாக அவசர அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மீது பறவைகள் மோதியதே விமான இயந்திரத்தில் தீ ஏற்பட்டதற்கான காரணம் என கூறப்படுகிறது.

விமானத்திற்குள் தீ பரவும் முன் பயணிகளை காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்த Damir Yusupov. George Murzin விமானிகள், மாஸ்கோவில் ஓடுபாதைக்கு அருகே உள்ள கிராமப்புற சோளக் காட்டில் விமானத்தை தரையிறக்கியுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், உயிரிழப்பு ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் சோளக்காட்டில் தரையிறங்கிய போது பயணிகள் பயத்தில் கதறிய காட்சி வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்