வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய தமிழர்கள் செய்த செயல்... விமானநிலையத்தில் கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வெளிநாட்டிற்கு சென்று திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர்கள் தங்கம் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

தாய்லாந்து தலைநகர் சார்ஜாவில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

அப்போது அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும், விமானநிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தமிழகத்தி, சென்னையை சேர்ந்த சூசை அலெக்ஸாண்டார் (62), ராபர்ட் (39) என்ற இருவரும் மியான்மர் நாட்டுக்கு சென்று விட்டு தாய்லாந்து விமானத்தில் சென்னை வந்துள்ளனர்.

இவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இருவரது உள்ளாடையிலும் 210 கிராம் தங்க கம்பிகள் மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதன் சர்வதேச மதிப்பு 8.3 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இவர்கள் உடைமைகளை சோதனை செய்தபோது வெளிநாட்டு மதுபானங்கள் 20 பாட்டில்கள் இருந்தன. மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் 20 பண்டல்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10 லட்சம் மதிப்புள்ள தங்கம், சிகரெட் பண்டல்கள் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்