வடகொரியா ஜனாதிபதி கிம் கையில் அணிந்திருக்கும் Watch-ன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஆச்சரிய தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வடகொரியா கடுமையான வறுமையில் இருக்கும் நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி அணி மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை பயன்படுத்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மூலம் உலகநாடுகளை மிரட்டி வந்த வடகொரியா, அமெரிக்காவுடன் நடந்த முதல் கட்ட பேச்சு வார்த்தையின் போது, இனி இது போன்ற ஏவுகணை தாக்குதலில் ஈடுபடமாட்டோம் என்று தெரிவித்தது.

ஏவுகணை சோதனையால் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்ததால், அந்த பொருளாதார தடையை நீக்கும் படி கேட்டிருந்தது. ஆனால் அந்த தடை நீக்கப்படாததாலும், அமெரிக்காவுடன் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காத காரணத்தினாலும் மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனையில் இறங்கியுள்ளது.

சமீபத்தில் கூட ஏவுகணை சோதனை நடத்திய வீடியோ வெளியாகி, மீண்டும் உலகநாடுகளுக்கு பீதியை கிளப்பியது.

அப்படி ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது போது, அங்கு வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இருந்துள்ளார். அப்போது அவர் தன் கையில் அணிந்திருந்த கடிகாரத்தின் விலை மட்டும் 10,000 பவுண்ட் விலைமதிப்புள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடை இருக்கிறது, அதுமட்டுமின்றி கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது அங்கு வறுமையும் கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுத்து வருகிறது.

இப்படி இருக்கையில் கிம்மிற்கு மட்டும் இந்த கடிகாரம் எப்படி கிடைத்தது. அதுவும் அந்த கடிகாரம் சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டது(IWC Portofino Automatic) எனவும், வெளிநாடு பொருட்களுக்கும் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.

என்ன தான் தடை இருந்தாலும், கிம்மிற்கு தேவையானவை வெளிநாடுகளிலிருந்து சென்று கொண்டு தான் இருக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக் இவருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்