57 பேர் உடல் கருகி பலி... விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறிய எரிபொருள் லொறி : உறைய வைக்கும் வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான தன்சானியா நாட்டில் எரிபொருள் டேங்கர் லொறி விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில் 57 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படத்தியுள்ளது.

துறைமுக நகரமான டார் எஸ் சலாம் நகருக்கு மேற்கே 124 மைல் தொலைவில் உள்ள மொரோகோரோ பகுதியில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

துறைமுகத்திலிருந்து சரக்கு மற்றும் எரிபொருளைக் கொண்டு செல்வதற்கான முக்கிய மற்றும் பரபரப்பான பாதையாக உள்ளது மொரோகோரோ. அப்பகுதியில் எரிபொருள் ஏற்றி வந்த டேங்கர் லொறி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான லொறியில் இருந்து கசிந்த எரிபொருளை பிடிக்க மக்கள் லொறியை சுற்றி சூழ்ந்துள்ளனர். இதன்போது, லொறியில் தீப்ப்றறி திடீரென வெடித்து சிதறிய பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 57 பேரின் உடல் மீட்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசார் உறுதி செய்துள்ளனர், மேலும், 65 படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகாரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்