ரஷ்யாவில் கதிர்வீச்சு... உலகிற்கே அபாயம்! புடின் என்ன மறைக்கிறார்? வெளியான திகிலூட்டும் தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்ய கடற்படை தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தால் பிராந்தியத்தில் திடீரென கதிர்வீச்சு கசிந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஒரு மாதமாக கடற்படை தளம் மூடப்பட்டுள்ளது மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட ரஷ்யாவில் உள்ள ஏவுகணை சோதனை மேற்கொள்ளும் கடற்படை தளத்தில் ராக்கெட் இயந்திரம் வெடி விபத்து ஏற்பட்டதிற்கும், அப்பகுதியில் கதிர்வீச்சு கசிந்ததிற்கும் தொடர்புள்ளதாக கூறப்படும் நிலையில் உலகமே எச்சரிக்கையாக உள்ளது.

ராக்கெட் விபத்தை உறுதி செய்த ரஷ்ய அரசு, இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்தை உறுதி செய்தது. எனினும், புதிய அணு ஆயுத சோதனையின் போது வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என பெருகிவரும் கவலையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய நிபுணர் டாக்டர் மார்க் கலியோட்டி கூறியதாவது, இச்சம்பவம் ரஷ்ய கூறுவதை விட மிகப்பெரிய பிரச்சினை. கதிர்வீச்சு பரவியதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இதை மறுத்துள்ளது.

குறித்த கடற்படை தளம் திரவத்தால் இயக்கப்படும் அணு ஏவுகணைகளில் ஒன்றை சோதனை செய்ய பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது - இது மிகவும் ரகசியமானது. இந்த வெடிவிபத்தை அடுத்து வெள்ளை கடல் பகுதியில், ஒரு மாதத்திற்கு கப்பல்கள் பயணம் செய்ய தடைவிதித்து ரஷ்ய மூடியுள்ளது.

அணு ஏவுகணையை சோதனை செய்த போது விபத்து ஏற்பட்டதால் இது கதிர்வீச்சு கசிவுக்கு வழிவகுத்தது என தெளிவாக தெரிகிறது என கலியோட்டி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, Severodvinsk உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் அலீனா என்ற பெண் அளித்த பேட்டியில், கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருது்தவமனையில் நான் பணியாற்றுகிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஜன்னல்களை மூடிவைக்குமாறும், ஒரு கிளாஸ் தண்ணீருக்கு 44 சொட்டு அயோடின் கலந்து குடிக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அலீனா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்