உடை களைந்து சோதனை செய்த பொலிசாருக்கு அதிர்ச்சியளித்த ’பெண்’: மீண்டும் அளித்த மாபெரும் அதிர்ச்சி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரேசில் சிறை ஒன்றில் சந்தேகத்திற்குரிய ஒரு பெண்ணை பொலிசார் உடை களைந்து சோதனை செய்தபோது, அது பெண்ணல்ல, பிரபல போதை கடத்தல் மன்னன் ஒருவர் என தெரிய வந்த நிலையில், தற்போது, தனது சிறை அறையில் அவர் தூக்கில் தொங்கி மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளார்.

சமீபத்தில் பிரேசில் சிறை ஒன்றிலிருந்து வெளியேறும் பெண்களில் சந்தேகத்துக்கிடமான ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தபோது, அவர், தனது மகளைப் போல முகமூடி அணிந்து தப்ப முயன்ற பிரபல போதை கடத்தல் மன்னன் Clauvino da Silva (42) என்பதை அறிந்து பொலிசார் அதிச்சியடைந்தனர்.

பின்னர், மேலும் அதிக பாதுகாப்புடைய சிறை ஒன்றில் அடைக்கப்பட்ட da Silva, பொலிசாருக்கு கடைசியாக இன்னொரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளார்.

ஆம்! da Silva, தனது புதிய சிறை அறையில், தனது படுக்கை விரிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெண் வேடத்தில் da Silva சிறையிலிருந்து தப்ப முயன்றதை தடுத்து விட்டதாக வீடியோ ஆதாரத்துடன் ஜம்பமடித்துக் கொண்ட பொலிசாருக்கு, இம்முறை உலகை விட்டே தப்பிய da Silvaவை தடுக்கமுடியாததால், அவர்கள் அவமானத்தில் உழல்வதாக செய்தி வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 74 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள Da Silva, 2013ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் ஒரு முறை கழிவுநீர் வடிகால் வாய்க்கால் வழியாக 30 கைதிகளுடன் தப்ப முயன்று சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்