ஆபாச அழைப்பை பதிவு செய்ய பெண்ணிற்கு ஏற்பட்ட நிலை... என்னை போன்று பாதிக்க கூடாது என வேதனை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
228Shares

இந்தோனிசியாவில் தனக்கு மேலிடத்தில் உள்ள ஊழியர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை நிரூபிக்கும் வகையில், அதை போனில் பதிவு செய்து வைத்த பெண்ணிற்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனிசியாவின் லம்புக் என்ற தீவில் இருக்கும் மதாரம் என்னும் இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பைக் நுர்.

இவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடமிருந்து மோசமான அலைபேசி அழைப்புகள் வருவதாக புகார் தெரிவித்திருந்தார். அதோடு அதை நிரூபிப்பதற்காக வந்த அழைப்பு ஒன்றை பதிவு செய்து வைத்திருந்தார்.

அந்த பதிவில் தலைமை ஆசிரிய பாலியல் ரீதியாக மிகவும் மோசமாக பேசுவது போன்று இருந்துள்ளது.

அதன் பின் அந்த பதிவு பிற ஊழியர்களுக்கு பகிரப்பட்டு உள்ளூர் கல்வி முகமையிடமும், அது ஒப்படைக்கப்பட்டதால், அது சமூக ஊடகங்களில் அது வைரலானது.

அந்த பதிவு பகிரப்பட்ட பிறகு தலைமை ஆசிரியர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால் ஆசிரியை பைக் அலைபேசி பதிவை அனைவரிடமும் பகிர்ந்துள்ளார் என பொலிசாரிடம் தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்தார்.

இதனால் இதற்கான விசாரணையின் போது,இரண்டு மாதங்கள் மற்றும் மூன்று நாட்கள் பைக் பொலிசாரின் பிடியில் இருந்தார்.

அதன் பின் இந்த வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்றதால், வழக்கை விசாரித்ட நீதிமன்றம், கடந்த நவம்பர் மாதம், பைக் ஒழுக்கத்தை மீறியதாக கூறி, அவர் மீது குற்றம் சுமத்தி, 35,200 அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தது.

ஆனால் அவரின் வழக்கறிஞரோ பைக் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்.

இதனால் இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வியால்,இந்தோனிசியா நாடாளுமன்றம் அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளது.

இது குறித்து அதிபர் ஜோகோ விடோடோ கூறுகையில், மிகவும் கடினமாக உள்ளது. இதற்கு மேல் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என நினைக்கிறேன். பெண்கள் தைரியமாக பேச வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

பைக் கூறுகையில், மூன்று குழந்தைகளுக்கு தாயான எனக்கே இந்த நிலை, என்னை போன்று எவரும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தோனேஷியாவில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் பெண்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன என்பதை இந்த வழக்கு மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்