கம்போடியா நாட்டில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் இருசக்கர வாகனத்துடன் சேர்த்து அடித்து செல்லப்படும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
கம்போடியா நாட்டின் சீம் ரீப் மாகாணத்தில் கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கினக் டாலி மற்றும் சோக் வாண்டி என்கிற இரண்டு இராணுவ வீரர்கள், நேற்று மதியம் தமர் கேவ் கிராமத்தில் உள்ள ஆற்று பகுதியை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்றுள்ளனர்.
அந்த சமயத்தில் ஆற்றில் ஏற்பட்டிருந்த வெள்ளப்பெருக்கு திடீரென அதிகரித்து பாலத்தை முழுவதும் அடித்து சென்றுள்ளது. அதில் இரண்டு இராணுவ வீரர்களும் சிக்கிக்கொண்டு அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அறிந்து வந்த மீட்பு படை அதிகாரிகள் தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் இதனை வீடியோவாக தன்னுடைய செல்போனில் படம்பிடித்துள்ளார்.