முதல் முறையாக விண்வெளிக்கு வீரரை அனுப்பும் பாகிஸ்தான்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
38Shares

பாகிஸ்தான் 2022ஆம் ஆண்டு தங்கள் நாட்டு விண்வெளி வீரரை, முதல் முறையாக விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் தங்கள் நாட்டு வீரரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. 2022ஆம் ஆண்டு அந்நாட்டின் விண்வெளி வீரர், விண்வெளிக்கு அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், முதல் விண்வெளி பயணத்திற்கான விண்வெளி வீரரை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற உள்ளதாக, பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபாவத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘விண்வெளிக்கு அனுப்பப்படும் முதல் பாகிஸ்தானியரை தேர்வு செய்ய 50 பேர் கொண்ட முதல்கட்ட பட்டியல் தயாரிக்கப்படும்.

பின்னர் அதில் இருந்து 25 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுள் 10 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். அவர்களில் ஒரு வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்