மத்திய தரைக்கடலில் கோர விபத்து: 150 புலம்பெயர்ந்தோர் வரை இறந்திருக்கலாம் என அச்சம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
103Shares

நேற்று புலம்பெயந்தோரை சுமந்து கொண்டு லிபியாவிலிருந்து வந்த இரண்டு படகுகள் கடலில் கவிழ்ந்ததில், 150 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்குள் நுழைவதற்காக புலம்பெயந்தோரை ஏற்றிக் கொண்டு பயணித்த இரண்டு படகுகள், மத்திய தரைக்கடலில் கவிழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை சரியாக இருக்கும் என்றால், மத்தியதரைக்கடலில் 2019ஆம் ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளிலேயே இதுதான் அதிக இழப்புகளை ஏற்படுத்திய சம்பவம் எனலாம்.

கடலில் கவிழ்ந்த 150 பேரை காணாத நிலையில், 125 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஆனைவருக்கும் மருத்துவ மற்றும் மனிதநேய அடிப்படையிலான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை காணாமல் போனவர்களில் ஒருவரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்