உயிர்பிரியும் நேரத்தில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய சிறுமி: நெஞ்சை உருக்கும் வீடியோ!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
121Shares

சிரியாவில் தன்னுடைய உயிர் பிரியும் நேரத்தில் கூட தங்கையின் சட்டையை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் சிறுமியின் வீடியோ காட்சி காண்போரை கண்கலங்க வைக்கிறது.

மேற்கு இட்லிப்பின் அரிஹாவில் நேற்று ரஷ்ய அல்லது சிரிய அரசாங்கப் படைகள், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்திய வான்வழி தாக்குதலில், 5 மாடி கட்டிடம் ஒன்று சிதைந்துள்ளது.

இந்த சம்பவத்தில் Asmaa Naqouhl என்கிற தாய் இடர்பாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவருடைய 5 வயது மகள் ரிஹாம் கட்டிட இடர்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் கூட, தன்னுடைய 7 மாத தங்கையின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் ரிஹாம் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

கட்டிடத்தின் விளிம்பில் இருந்த தன்னுடைய சகோதரி கீழே விழுந்துவிடாமல் இருப்பதற்காக அவருடைய டி-ஷர்ட்டை ரிஹாம் இறுக்கமாக பிடித்து கொண்டார். அதேசமயம் தந்தை அம்ஜத் அல் அப்துல்லா, மகள்களை எப்படி காப்பாற்றுவது என்பது தெரியாமல் தலையில் கைவைத்தபடியே திணறி கொண்டிருந்துள்ளார்.

காண்போரை கண்கலங்க வைக்கும் இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் மீட்கப்பட்ட 7 மாத குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அதேசமயம் தன்னுடைய தங்கையின் உயிரை கைப்பற்றிய ரிஹாம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்