உலகிலேயே மூத்த ஜனாதிபதி.. ஜனநாயக நாயகன் எசெப்சி காலமானார்: துக்கத்தில் துனிசியா

Report Print Basu in ஏனைய நாடுகள்

வட ஆப்பிரிக்கா நாடான துனிசியா நாட்டின் ஜனாதிபதி பெஜி கெய்ட் எசெப்சி 92 வயதில் ஜூலை 25ம் தேதி காலமானார். இச்செய்தியை அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை மூலம் வெளியிட்டு உறுதிசெய்துள்ளது.

துனிசிய முன்னாள் ஜனாதிபதி ஜைன் எல்-அபேடின் பென் அலி 23 ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னர் 2011 இல் வெளியேற்றப்பட்டார். அப்போதிருந்து, புரட்சிகளிலிருந்து வெளிவந்த ஒரே ஜனநாயக நாடு என்ற புகழைப் பெற்ற துனிசியா, அரபு வசந்தம் என்றும் அழைக்கப்படும்.

பெஜி கெய்ட் எசெப்பி துனிசியாவின் முதல் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. 2011 முதல் நாட்டின் ஜனநாயக மாற்றத்திற்காக எசெப்சி ஒரு முக்கிய பங்காற்றினார். உலகத்திலே பதவியில் இருந்த மூத்த ஜனாதிபதி எசெப்சி ஆவார்.

பிராந்தியத்தில் அரபு எழுச்சிகளைத் தொடர்ந்து, 2014 ஆண்டு நடந்த துனிசியாவின் முதல் சுதந்திர தேர்தலில் எசெப்சி வெற்றி பெற்றார். உடல்நல குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த எசெப்சி, கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் சிகிச்சை பெற்றார்.

ஆனால், ஜூலை 1 ம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் ஜனாதிபதி இரண்டு முறை மட்டுமே பொதுவில் தோன்றியுள்ளார்.

புதன்கிழமை எசெப்சி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால், அவர் ஏன் சிகிச்சை பெறுகிறார் என்று அதிகாரிகள் கூறவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில், நவம்பரில் எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் தான் நிற்க மாட்டேன் என்று அறிவித்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்