முதன்முறையாக உலகுக்கு முகம் காட்டிய ரஷ்ய ஜனாதிபதியின் மகள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள் ஒருவர் முதன்முறையாக உலகுக்கு முகம் காட்டியுள்ளார்.

புடினின் மகள்கள் இருவருமே பிறந்தது முதலே, ரகசியமாக, வெளி உலகுக்கு முகம் காட்டாமலே வளர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் புடினின் மூத்த மகளான Maria Vorontsova (33) முதன்முறையாக தொலைக்காட்சி ஒன்றில் தோன்றியதைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் endocrinology என்னும் துறையில் ஆராய்ச்சியாளராக

இருக்கும் Mariaவின் பேட்டி ஒன்று வெளியானதையடுத்தே, புடினுக்கு இப்படி ஒரு மகள் இருப்பது வெளி உலகுக்கு தெரியவந்தது.

அவரைக் குறித்து பெரிய அளவில் ஒன்றும் தெரியாவிட்டாலும், அவர் Russian Society of Young Endocrinologists என்னும் அமைப்பின் துணைத்தலைவராக உள்ளதாக தெரியவந்துள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த தொழிலதிபரான Jorrit Faassen(39) என்பவரை மணந்துள்ள Maria ஒரு குழந்தைக்கு தாய் என்று கூறப்படுகிறது.

ஒரு முறை புடின் தனது மகள்களைக் குறித்து, அவர்கள் தங்கள் வாழ்வில், வேலை என்னும் பகுதியில் முதல் படியை எடுத்து வைக்கிறார்கள், அவர்கள் அரசியலிலோ தொழிலிலோ ஈடுபடவில்லை என்று கூறியிருந்தார்.

அவர்கள் ரஷ்யாவில் வாழ்கிறார்கள், ரஷ்யாவில் படித்தார்கள், என்றாலும், எனது மகள்கள் மூன்று ஐரோப்பிய மொழிகளில் சரளமாக பேசுவார்கள் என்று பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார் அவர்.

2015ஆம் ஆண்டு, Mariaவுக்கு இன்னொரு சகோதரி இருப்பதாகவும், தற்போது 32 வயதாகும் Ekaterina Tikhonova என்னும் அவருக்கு, மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

Rock 'n' Roll நடனக் கலைஞரான Ekaterina, Ivan Klimovஎன்பவருடன் நடனமாடும் வீடியோ ஒன்றும் பின்னர் வெளியானது.

புடின் தனது மனைவியாகிய Lyudmila Putinaவை 2013ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்