போர் தொடுப்போம் என மிரட்டிய சீனா... அடுத்த சில மணி நேரங்களில் வந்த அமெரிக்க போர்கப்பலால் பதற்றம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தைவானை சீனா போர் தொடுப்போம் என்று மிரட்டிய நிலையில், அந்நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது.

சீனாவிற்கு அருகில் இருக்கும் தீவு நாடான தைவானில், சுதந்திர ஆட்சி நடந்து வருகிறது.

ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டில் இருக்கும் ஒரு பகுதி தான் எனவும், இந்த நாடு தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் தன்னாட்சி பகுதி என்று கூறி வருகிறது.

இதற்கு தைவான் ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால், தைவானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீனா அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதில், சீனா, ஜின்ஜியாங், திபெத், தைவான் ஆகிய 3 பிராந்தியங்களும் சீனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், தைவான் சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொண்டு வருவதாகவும், வெளிநாடுகளின் உதவியுடன் ஆயுத பலத்தை பெருக்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த அறிக்கை வெளியான அடுத்த சில மணி நேரங்களில், அமெரிக்க போர் கப்பல், தைவானை ஒட்டிய கடல் பகுதிக்கு விரைந்தது.

சர்வதேச சட்டம் அனுமதிக்கும் கடல் பகுதிகளில் தங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் செல்வதை யாரும் குறைகூற முடியாது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீன கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்துள்ளதால், அப்பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த அமெரிக்க போர்கப்பல் தொடர்பான புகைபடங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்