பாலம் கட்ட நரபலி கொடுக்கப்படும்...! தகவல்: 8பேரை பலிகொடுத்த மக்கள்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

வங்கதேசத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் குறித்து இணைத்தில் பரவிய தகவலால் எட்டுபேரை சிலர் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு தெற்கே பத்மா மேம்பாலம் கட்டுவதற்கு நரபலி கொடுக்க குழந்தைகள் தேவைப்படுவதாக கிளம்பிய வதந்தியை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து, கடத்தல்காரர்கள் என்று தங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் தென்பட்ட எட்டு பேரை மக்கள் கும்பலாக சேர்ந்து கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அனைவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆனால், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட உண்மையில் குழந்தை கடத்தல்காரர்கள் கிடையாது என்பதை அந்நாட்டு காவல்துறை தற்போது உறுதி செய்துள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த வதந்தி தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் இறந்த ஒருவரின் புகைப்படம் மட்டு வெளியிடப்பட்டுள்ளது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்