கிம் ஜாங் உன்னுக்கு 13 ஆண்டுகள் உணவு சமைத்தவர் மாயமான விவகாரம்: வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் குடும்பத்தாருக்கு 13 ஆண்டுகள் உணவு சமைத்தவர் திடீரென்று மாயமான நிலையில், அவர் தற்போது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது.

கிம் ஜாங் உன் குடும்பத்தாருக்கு 13 ஆண்டுகள் ஜப்பானிய உணவு வகைகளை சமைத்தவரும், கிம்மின் குழந்தை பருவ விளையாட்டு தோழனுமான கென்ஜி புஜிமோட்டோ திடீரென்று ஒருநாள் மாயமானதாக தகவல் வெளியானது.

கிம் ஜாங் உடன் தமக்கிருந்த நெருங்கிய உறவு தொடர்பில் அவர் ஜப்பானிய செய்தி ஊடகம் ஒன்றிற்கு விரிவான நேர்முகம் அளித்த நிலையிலேயே மாயமானார்.

இந்த விவகாரத்தில் அரசியல் நோக்கர்கள் கிம் மீதே சந்தேகம் எழுப்பினர். கிம்மின் கோபத்திற்கு இரையானதாலையே சமையல் கலைஞர் கென்ஜி மாயமானதாகவும்,

அல்லது வடகொரியாவில் ஏதேனும் ஒரு சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அவர் காலத்தை போக்குவார் எனவும் பரவலாக பேசப்பட்டது.

ஆனால் வடகொரியாவுக்கான பிரித்தானிய தூதர் காலின் க்ரூக்ஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த தகவல், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதில், சமையல் கலைஞர் கென்ஜி பிரத்யேக உணவு ஒன்றை காலின் க்ரூக்சுக்கு பரிமாறுகிறார். இது அவர் வடகொரிய நிர்வாகத்தால் கைது செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல,

அவர் வடகொரியாவிலேயே தங்கியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 2001 ஆம் ஆண்டு ஜப்பானுக்கு தலைமறைவான அவர், பின்னர் 2012 ஆம் ஆண்டிலேயே வடகொரியா திரும்பியுள்ளார்.

மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு வடகொரிய தலைநகரில் உணவு விடுதி ஒன்றையும் துவக்கி செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்